தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Thursday 31 October 2013

தீபாவளி :"ஒளிகாட்டும் வழி"

"ஒளிகாட்டும் வழி"  

அன்பின் மொழியினாய் அறம்செய முயலுவோம்;
ஆசைகள் நீங்கிட ஆலயம் தொழுகுவோம்;
இயல்பின் ஒளிஎழ இன்னலை அகற்றுவோம்;
ஈகை பண்பினால் இனிப்பினை பகிருவோம்;
உழைப்பின் உன்னத மகத்துவம் உணருவோம்;
ஊரே மகிழ்ந்திட உறவினை பரப்புவோம்;
எளியோர் மகிழ்ந்திட இயன்றதை உதவுவோம்;
ஏழ்மை குறைந்திட ஏற்றத்தை  காணுவோம்;
ஐயம் அகன்றிட வையகம் போற்றுவோம்;
ஒளியின் வழியிலே இருளினை விலக்குவோம்;
ஓய்வை போற்றிட ஒலியினை சுருக்குவோம்;
ஔவியம் அகன்றிட அகல்ஒளி ஏற்றுவோம்;
அஃதே வழியினாய் நன்மையை பெருக்குவோம்;
சிவகாசி சிறுவர்க்கும் சிரிப்பொலி(ளி) வழங்குவோம்;
சீர்திருத்த முறையிலே சிக்கனம் பழகுவோம்;
சுற்றம் மாசில்லா சூழ்நிலை பேணுவோம்;  
சிந்தையில் ஒளிநாளை செலுத்தியே மகிழுவோம்.


"அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்"திரு. ரூபன் அவர்களின் தீபாவளி கவிதைப் போட்டிக்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.  இதிலுள்ள பிழை பொறுத்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ள...


நன்றி.

நட்புடன்,
நடராஜன் வி.

Monday 28 October 2013

குறை ஒன்றும் இல்லை பாடல்


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

MP3 லிங்க்: 

Friday 11 October 2013

பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll 

02. த‌கவலறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி  http://www.rtiindia.org/forum/content/


03. இந்திய அரசின் இணையதள முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/ 

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/ 

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/ 

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm 

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/ 

17. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

Thursday 3 October 2013

உலகளாவிய தமிழர்கள்: பகுதி 1

1. சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்:
வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952), தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக்கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கருஅமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கு 2009ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி:
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi, பிறப்பு:அக்டோபர் 28, 1955) உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். இந்திரா நூயி ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பள்ளிப்படிப்பை சென்னையில் நிறைவு செய்தார். போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக மதிப்பிட்டது என்ற   சிறப்பிற்குரியவர்.

3. வி. ஏ. சிவா ஐயாதுரை:
வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு: திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுபிடிப்பாளரும், தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் (EMAIL) என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர். இவர் 1978 –ல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர்.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...