தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday 22 November, 2011

கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த நிலைப்பாடு:

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், மின்சார தேவைக்கும் இன்றியமையாத யுரேனியம் எனும் அணுசக்தி மிகவும் அவசியம்.  எடுத்துக்காட்டாக டீல் சக்தியில் ஓடும் ஒரு நீர்மூழ்கி/விமானம் தாங்கி கப்பலானது 72 மணிநேரத்திற்கு ஒரு முறை மீண்டும் டீல் நிரப்ப வேண்டி வரும். ஆனால் அணுசக்தியில் இயங்கும் கப்பலோ ஒரு முறை நிரப்ப செய்தால் மீண்டும் 35 வருடம் கழித்து எரிசக்தி தேவைக்கு கரைக்கு வந்தால் போதும். இதுவே அணுவின் அளப்ரிய க்தி.


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களையும், இந்த இடத்தை தேர்வு செய்தற்கான காரணத்தையும் பார்ப்போம்.

1 )கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள  அணுவுலையின் சுவரானது 6 மீட்டர் அடர்த்தி(Thickness) கொண்டது. கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாத அளவு பாதுகாப்பானது. முற்றிலும் திடமான இந்திய கான்க்ரீட் கவுன்சிலால் பரிசோதிக்க
ப்பட்ட பின்னரே அந்த கான்க்ரீட்(Concrete) நிரப்பப்பட்டு உள்ளது. ஏவுகணை தாக்கினாலோ, விமானம் விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

2)திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில தட்டில் அமைந்து உள்ளதால், நிலநடுக்கம் வர வாய்ப்புகள் குறைவு, வந்தாலும் பூமி தட்டு பிரியவோ, ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஒரே நிலதட்டில் உள்ளது நெல்லை மாவட்டம்.

3))சுனாமி வந்தாலும் அதை தடுக்க, அலை தடுப்பு பாறைகள் கடலுக்கு நீண்ட தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன, அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் மேலேயே கட்டப்பட்டு உள்ளது. சுற்றி பாதுகாப்பு சுவரும் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் தென்மேற்கு பகுதியான இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து அதிகம் சுனாமி வர வாய்ப்பு இருந்தாலும், அங்கே இருந்து வரும் பேரலைகளோ இலங்கையில் மோதி விடும். ஏற்கனவே சுனாமி தாக்கிய போது கூடங்குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. சுனாமி வந்த பின்னரும் ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சில் மாற்றம் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
  
4 ) அணுவை பிரிக்கும் செயலானது கட்டு
ப்படுத்த முடியாமல் போனால், உடனே அணு உலை தானாக செயல் இழந்து விடும், அணுவை தன்னுள் அடக்கிவிடுமாறும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

5 ) உலை வெப்ப நீக்க முறையானது , உலகிலேயே மிக நவீனமானது. அதே போல அனைத்து நாடுகளிலும் அணுஉலைக்கு தேவையான குளிர்விப்பான்
(Coolant) ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் ஆனால் இங்கு நான்கு  குளிர்விப்பான் பயன்படுத்த படுகிறது. ஒரு குளிர்விப்பான் செயல் இழந்தாலும் மற்ற மூன்றில் ஒன்றை பயன்படுத்தலாம், இந்த நான்கு குளிர்விப்பான்களுக்கும் நான்கு மின்னியற்றிகள்(Generators) உபயோகபடுத்தப்படுகின்றன.

6) சூறாவளி காற்றின் வேகத்தை கட்டுபடுத்த ஏற்றவாறு உலையின் மேல் பகுத்து வடிவமைக்க
ப்பட்டு, இரும்பால் ஆன ஒரு பாதுகாப்பு வளையமும் வைக்கப்பட்டு உள்ளது.

7 ) வெளியேறும் புகை மிக மிக குறைவானதாக இருந்தாலும் அது சுற்று சூழலை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு புகை
ப்போக்கி உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட படி 100 மீட்டர் உயரம் வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது.

இவ்வளவு பாதுகாப்பு காரணிகளையும், வரையறைகளையும் கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு, அதன் செயல்பாட்டினை எதிர்நோக்கியுள்ளது. இப்போதைக்கு அதன் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட்டால், மின் உற்பத்தியினை தொடங்கி மின்பற்றக்குறையை  நிவர்த்திசெய்யும் செய்யும் விதத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடங்குளம் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...