தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...

முன்னுரை:

பல ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதியார் பாடியதிலிருந்து அப்பாலத்தின் முக்கியத்துவத்தினையும் பழம்பெருமையினையும் நாம் அறியலாம். அவ்வாறு பெயர் பெற்ற சேதுசமுத்திர திட்டமானது நிறைவேருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகிறது. அதன் பயன்பாட்டினால் எரிபொருள் சிக்கனம், பொருளாதார உயர்வு ஆகிய பயன்களை பெறலாம்
பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம்) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொருளுரை:

சிங்கள தீவினிற்கோர் பாலம் வரலாறு:

  • 1860- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது.
  • 1861 - டௌன்செண்டு (Townsend) அவர்களின் முன்மொழிவு.
  • 1863 - மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் (Sir William Denison) அவர்களின் முன்மொழிவு
  • 1871 - ஸ்டோடார்ட் (Stoddart) அவர்களின் முன்மொழிவு
  • 1872 - துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் (Robertson) அவர்களின் முன்மொழிவு
  • 1884 - சர் ஜான் (Sir John) அவர்களின் தென்னிந்திய கப்பல் கால்வாய்த் துறைமுகம் மற்றும் கரி ஏற்று-இறக்குமதி நிலையக் கும்பினி என்பதற்கான முன்மொழிவு
  • 1903 - தென்னிந்திய தொடர்வண்டிப் (இரயில்வே) பொறியியலாளர்கள் முன்மொழிவு
  • 1922- துறைமுகப் பொறியாளராக இருந்த சர். ராபர்ட் ப்ரிஸ்ட்டோ திட்டத்தைப் பரிந்துரை செய்கிறார்.
  • 1955- ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான "சேது சமுத்திரத் திட்டக் குழு" 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.
  • 1983- இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

  • இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்படமாட்டாது.
  • 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும்.
  • கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
  • பனாமா கால்வாய் போல குறும பார்வைத் தொலைவு 2.5 கி.மீ.
  • 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.
  • இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும்.
    • கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு. கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு.
    • கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு.
    • கப்பல்கள் அதிகப் பயணம் மேற்கொள்ள முடியும்.
  • கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.
  • இராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.

சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும்:

பொய் தீர, மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)
-           சுப்ரமணிய பாரதி
இந்திய சுதந்திரபோராட்டத்தில் பிரித்தானியா அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வ. உ . சிதம்பரம்பிள்ளை பிரித்தானியா கப்பல்களுக்கெதிராக நடத்தி காண்பித்த சுதேசிய கப்பல் சேவையை குறிப்பிடலாம்.
பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கெதிராக கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் சுதேசிய கப்பல் சேவை நடத்தி காட்டி தமது பிரித்தானிய ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சி. சிதம்பரம்பிள்ளை என்பதுடன் மறுபுறம் இந்திய உப கண்டம் தழுவிய மாபெரும் சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டையும் அங்கு வாழ்ந்த தமிழரையும் கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பினை பெற்று வரலாற்றில் பதிவு செய்தவர். அன்று அவர் கொழும்புக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பல் விட்டபோது அக்கால கட்டத்தில் நன்கு தமிழகத்தில் அறியப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் கலந்து கொண்டு மகாகவி சுப்ரமணிய பாரதி உட்பட அந்நிகழ்வை கொண்டாடினார்கள்.
அந்நிகழ்வில் தமது தேச பக்தியையும் எதிர்கால சுபீட்சமிகு இந்தியாவையும் பற்றி பாரத தேசம் கவிதையை பாரதி பாடினார் அல்லது எழுதினார். பொதுவாகவே பாரதி தனது கவிதைகளை பாடி சொல்லும் வழக்கமுடையவர் என்பதால் அக்கவிதையை பாடியுமிருக்கலாம். இந்த கவிதையில் தான் அவர்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்.
என்று தொடங்கும் நீண்ட கவிதையில் மேற்குலகுக்கு கப்பல் விடுவோம் என்பதற்கப்பால் தமது நாட்டுக்கு மிக அண்மையாகவுள்ள சின்னஞ சிறிய தீவான இலங்கைக்கு பாலம் அமைக்க கூட கனவு கொண்டார். அதனால் தான் கொழும்புக்கு கப்பல் விட்ட நிகழ்வுடன் பாரதி இலங்கைக்கு பாலம் அமைக்கும் கனவினை ஒரு இந்திய ஆக்கிரமிப்பு கருத்துடன் அல்லாது இரு நாடும் இணையம் (புராண காலத்தில் -ராமாயணத்தில் – இராமன் இலங்கைக்கு கட்டிய பாலம் உட்பட்ட பகுதி சேது என்று அழைக்கப்படுகிறது) சிதைவுற்ற தொட்டம் தொட்டமான மணற்தொடுகையான சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கனவு கண்டார்.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
எப்படியாயினும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்கும் தூத்துக்குடியை சேர்ந்த பாரதியின் கனவும் வெறும் கனவல்ல மெய்ப்படவேண்டிய பிரார்த்தனைக் கனவு. தூத்துக்குடியை சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ உ சி-யின் கப்பல் பயணங்களும் வெறுமனே ஒரு சரித்திர சம்பவமல்ல மாறாக திவாலாகிப்போன அவரின் கப்பல் நிறுவனத்தினை விட அவரின் பெயரிலே உள்ள கப்பலில் பயணங்கள் செய்வதன் மூலம் அவரின் பெயரை சாதாரண மக்களின் வாய்களில் உச்சரிக்கப் பண்ணப்போகும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் இது.
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்நாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
;
;;
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
தென்னாசியாவில் இணைவு பெறும் புதிய பொருளாதர பரஸ்பர நலன்கள் மேவிய பயன்கள் இவ்விரு நாடுகளையும் இன்னமும் இறுக்கமாக இணைக்கலாம் சேதுவை மேடுறுக்கலாம் வ உ சியின் கப்பல்கள் தமிழனின் கப்பல் வரலாற்றை நினைவுறுத்தி பயணிகளை இன மத மொழி வேறுபாடின்றி சுமந்தே இணைக்கலாம்.
முடிவுரை:
1860 வது வருடம், சுமார் 165 வருடத்துக்கு முன்னால் இருந்து, ஆங்கிலேய கமாண்டர் டெய்லர்ல ஆரம்பிச்சு பலபேரோட கனவா இருந்த சேது சமுத்திரம் திட்டம் இப்போது நனவாகப் போகுது. 165 வருடக் கனவு நனவாகப் போகுதுன்னு பெருமையா இருந்தாலும், ஒரு நல்ல திட்டத்தினை செயல்படுத்த 165 வருடம் ஆகுதுன்னு நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு.
1959 வது வருடத்தில்  பண்ணியிருந்தால் ரூபாய் 1.8 கோடிலயும், 1963-ல பண்ணியிருந்தால் ரூபாய் 23 கோடிலயும் பண்ணியிருக்க வேண்டிய இந்தத் திட்டத்துக்கு இப்போது ரூபாய் 2500 கோடிக்கும் மேல செலவு செய்ய வேண்டியுள்ளது. ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ நனவாகப் போகுது. அதே மாதிரி ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால’ மையத்து நாடுகள்ல பயிர் செய்யற கனவு நிறைவேற இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டுமென்று தெரியவில்லை.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...