தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்:

1.பாடல்: சந்தோஷம் சந்தோஷம்
   படம்: யூத்

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணித்
திருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல
பாடம் படி பவழக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்
குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால்
நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
ஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழையில்லையே
துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்



2.பாடல்: அச்சம் அச்சம் இல்லை
   படம்: இந்திரா

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ஹே அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
வாடி இளையசெல்லிலே.. வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகு கண்ணம்மா… அம்மா அழகு கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா
லலா லலல்லல்லோ பட்டாம்பூச்சி
லலா லலல்லல்லோ பட்டாம்பூச்சி
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி துறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்
கோழிச்சிறகு குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்...



3.பாடல்: இன்னிசை பாடிவரும்
   படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே
கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றாவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
உயிர் ஒன்று இல்லாமல் உடல் நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே

 

 4.பாடல்: தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
    படம்: டூயட்
 
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை
தூய உருப்பளிங்கு போல் வழ என்
உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு
வாராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமல் பூந்தாமரை போற்கையும்
துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதம்
துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
 மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
 தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
எத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு
 நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு
 மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
 இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
 பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
 தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு...



5.பாடல்: சின்னச்சின்ன மழைத்துளிகள்
   படம்: என் சுவாசக் காற்றே

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது
 சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது.
மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்...


No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...