தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

~*~கருத்துத் துளிகள்~*~

புரிதலில் பிரிதலுக்கு இடமில்லை
புரிந்து கொள்ளும் வரையில் தான் ஒருவர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு.
நன்கு புரிதலுக்குப் பின் பிரிதலுக்கு இடமில்லை.


தாயின் குணம் சேயின் நலம்
மண்ணில் விதை விழுந்து விருட்சமாக தேவையான அடிப்படை  தேவைகளை போல், மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு.  ஆனால் முக்கியமானது மண்ணின் தன்மை. மண்ணின் குணங்களே  அதற்கு ஆதாரம். இதைப் போல் மனிதனின் எதிர்கால வாழ்வின்  சிறப்பிற்கு ஆதாரம் பெற்றெடுக்கும் தாயின் குணங்களும்,  சிறப்பியல்புகளுமே.

விண்ணின் குறை மனிதனுக்கு எதிர்வரும் சிறை
கண்ணின் இமையினைப் போலே விண்ணின் இமையாக இருப்பது  ஓசோன் படலம். கண்ணில் தூசி விழுகையில் அதை உடனே தடுக்க  இமையுள்ளதை போல் விண்ணில் துளை விழாமல் தடுப்பதே ஓசோன்  படலத்தின் பணி. விண்ணின் துளையை கண்ணின் இமை போல்  கருத்தில் கொண்டு, கவனமுடன் கையாளுவோம் சுற்றுப்புறத்தினை.

உழைப்பின் பெருமை செழிப்பில் தெரியும்
உழைப்பு கற்றுக்கொடுக்க உரிய பயிற்சியாளன் தான் தேவை என்பதில்லை; ஒற்றை எறும்பும் போதும். அது தன் உழைப்பினை உறுதிகொண்டு உணர்த்தி விடுகிறது.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...