தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...

கால இயந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. அவ்வாறு சென்ற பொழுது அங்கு பத்திரிகைகளில் வந்த தலைப்புச் செய்திகளே இவை. 

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள். சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி.

தேதி : 01.09.2020

 ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு. 


ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே. 

இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது. 

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி.

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி.
 

 காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை.

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். 

இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை. 

வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு. 


ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை. 

தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பெக்ட்ரம் வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு.

அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே. 

கருப்பு பணம் குறித்து இந்த முறை நிச்சயம் கணக்கு வைத்திருப்போரின் பட்டியல் சுவிஸ் வங்கிகளிடமிருந்து பெறப்படும் - மத்திய அரசு நம்பிக்கை.

டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...